அமைவிடம் : காஞ்சிபுரத்திலிருந்து 740 கி.மீ., திருச்சூரிலிருந்து 32 கி.மீ., கொச்சியிலிருந்து 40 கி.மீ.,
சென்னை – கொச்சி இரயில் பாதையில் இரிஞாலக்குடா என்னும் இரயில் நிலயம் வரை 657 கி.மீ.
இங்கிருந்து 25 கி.மீ. தொலைவில் கோயில். இரிஞாலக்குடாவிலிருந்து ஆட்டோவில் செல்லலாம்.
அல்லது சென்னையிலிருந்து திரிச்சூர் வரை இரயிலில் வந்துவிட்டு அங்கிருந்து
பேருந்து மூலமாக (30 கி.மீ.) கொடுங்காளூர் வந்து அங்கிருந்து 2 கி.மீ. ஆட்டோவில்
பயணம் செய்து கோயிலுக்கு வரலாம். சென்னையிலிருந்து (திரிச்சூர் வழி) 665 கி.மீ.
திருச்சியிலிருந்து 340 கி.மீ. மதுரையிலிருந்து 310 கி.மீ.
இறைவன் : அஞ்சைக்களத்தீஸ்வரர், மகாதேவர்
இறைவி : உமையம்மை
தலமரம் : சரக்கொன்றை
சிறப்பு : சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலத்தில் இருந்துதான் வெள்ளை யானையின் மேலமர்ந்து திருக்கயிலை
சென்றார். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் சுவாதி அன்று சுந்தரர் திருக்கயிலை செல்லும் விழாவினை
கோவை சேக்கிழார் திருக்கூட்டத்தார் சிறப்பாகச் செய்து வருகிறார்கள்.
கோயிலுக்கு எதிரே ஒரு மேடை உள்ளது. யானை வந்த மேடை என்று பெயர். அங்கிருந்துதான் சுந்தரர்
கயிலைச் சென்றதாகக் கூறுவர். இவரைத் தொடர்ந்து சேரமான்பெருமாள் நாயனாரும் தம் குதிரையில்
திருக்கயிலைச் சென்றதாக வரலாறு.
தீர்த்தம் : சிவகங்கை
பாடல் : சுந்தரர்
முகவரி : Arulmigu. Mahadeva Swamy Temple, Sri Vanchikulam & Post, (via) Kodungalore – 680 664. KERALA (Trichur Dt.)
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 05.00 – 11.00 ; மாலை 05.00 – 08.00
தொடர்புக்கு : 0480-2812061
இருப்பிட வரைபடம்
| |