நால்வர் பெருமக்கள்

திருஞானசம்பந்தர்

தந்தையார்			: சிவபாதஇருதயர்	
தாயார்				: பகவதி
அவதாரம் செய்த நாடு		: திருமுனைப்பாடி (கடலூர் மாவட்டம், தமிழ்நாடு)
அவதாரம் செய்த தலம்		: சீர்காழி (கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து மேற்கே 22 கி.மீ.)
 பெற்றோர் இட்ட பெயர்		: பிள்ளையார்
இறையருளால் விளங்கிய திருநாமம்: திருஞானசம்பந்தர்
ஏனைய பெயர்கள்		: காழிவேந்தன், தமிழாகரன், புகலிவேந்தன், தமிழ்ஞானசம்பந்தன், 
				   ஆளுடைபிள்ளையார் 
மனைவி			: தோத்திரபூர்ணாம்பிகை                                    
காலம்				: கி.பி. 6 ஆம் நூற்றாண்டு
பின்பற்றிய நெறி			: மகன்மை நெறி (சற்புத்திரமார்க்கம்)
உலகில் நிலவிய காலம்		: 16 ஆண்டுகள்
ஆக்கிய திருமுறைகள்		: ஒன்று, இரண்டு, மூன்று
அருளிய நூல்			: திருக்கடைக்காப்பு (தேவாரம்)
பாடிய பதிகங்கள்			: 1600
பாடல்களின் எண்ணிக்கை		: 16000
கிடைத்த பதிகங்கள்		: 385 (கடைசியாக கிடைத்த கிளியனூர் பதிகம் உள்பட)
கிடைத்த பாடல்கள்		: 4169
ஒன்றாம் திருமுறை		: 136 பதிகங்கள் (1469 பாடல்கள்)
இரண்டாம் திருமுறை		: 122 பதிகங்கள் (1331 பாடல்கள்)
மூன்றாம் திருமுறை		: 127 பதிகங்கள் (1369 பாடல்கள்)
முதல் பாடல்			: தோடுடைய எனத்தொடங்கும் பாடல்
இறுதிப் பாடல்			: நறும்பொழில் எனத்தொடங்கும் பாடல்                             
முக்தி அடைந்த தலம்		: நல்லூர்ப்பெருமணம் என்கிற ஆச்சாள்புரம் 
				  (கடலூர் மாவட்டம், கொள்ளிடத்திலிருந்து 6 கி.மீ.) 
சமகால நாயன்மார்கள்		: அப்பூதியடிகள், குலச்சிறையார், திருநீலகண்டயாழ்ப்பாணர், 
				  திருநாவுக்கரசர், மங்கையர்க்கரசியார், முருக நாயனார், 
                                	 திருநீலநக்கர், நம்பியாண்டார்நம்பி, நின்றசீர்நெடுமாறன்
இறைவன் திருவடியில் 
இணைந்த நட்சத்திரம்		: வைகாசி மாதம் மூலம் நட்சத்திரம்

திருஞானசம்பந்தர் வாழ்வில் நிகழ்ந்த திருவருள் நிகழ்ச்சிகள்


உமாதேவியார் ஞானப்பால் அளித்தது
"தோடுடைய செவியன்" - 1-1-1

இறைவனிடம் பொற்றாளம் பெற்றது
"மடையில் வாளை" – 1-23-1

இறைவனிடம் முத்துச் சிவிகைப் பெற்றது
"எந்தை ஈசன் எம்பெருமான்" - 2-90-1

இறைவனிடம் முத்துப் பந்தர் பெற்றது
"பாடல்மறை சூடல்மதி" – 3-73-1

திருஞானசம்பந்தர் தம் வாழ்வில் நிகழ்த்தியருளிய திருவருள் நிகழ்ச்சிகள்


பாலை நிலத்தை நெய்தல் நிலமாக்கியது
"காரைகள் கூகைமுல்லை" – 2-84-1

முயலக நோய் தீர்த்தல்
"துணிவளர் திங்கள"– 1-44-1

பனி நோய் தீர்த்தல்
"அவ்வினைக் கிவ்வினையாம"– 1-116-1

உலவாக்கிழி பெறுதல்
"இடரினும் தளரினும்"– 3-4-1

அரவம் தீண்டிய வணிகனை உயிர்ப்பித்தது
"சடையாய் எனுமால"– 2-18-1

மறைக்கதவம் அடைக்கப் பாடியது
"சதுரம் மறைதான்"– 2-37-1

பாண்டியனின் வெப்பு நோய் தீர்த்தது
"மந்திரமாவது நீறு"-2-66-1

சமணரை வாதில் வென்றது (அனல்வாதம்)
"வாழ்க அந்தணர்"– 3-54-1

சமணரை வாதில் வென்றது (புனல்வாதம்)
"போகமார்த்த பூண்முலையாள்" 1-49-1

ஓடம் உய்த்தது
"கொட்டமே கமழும"– 3-6-1

ஆண் பனையைப் பெண் பனையாக்கியது
"பூத்தேர்ந்து ஆயன"– 1-54-1

எலும்பைப் பெண்ணாக்கியது
"மட்டிட்ட புன்னையங்கானல்"– 2-47-1
நால்வர் பெருமக்களைத் தரிசிக்க