நால்வர் பெருமக்கள்

திருநாவுக்கரசர் (வாகீசர்)

தந்தையார்			: புகழனார்		
தாயார்				: மாதினியார்
தமக்கையார்			: திலகவதியார்
அவதாரம் செய்த நாடு		: திருமுனைப்பாடி (கடலூர் மாவட்டம்,தமிழ்நாடு)
அவதாரம் செய்த தலம்		: திருவாமூர் (கடலூர் மாவட்டம், பண்ருட்டியிலிருந்து மேற்கே 8 கி.மீ.)
பெற்றோர் இட்ட பெயர்		: மருள்நீக்கியார் 
சமணசமயத்தில் வைத்த பெயர்	: தருமசேனர்
இறைவன் சூட்டிய திருநாமம்	: திருநாவுக்கரசர்
திருஞானசம்பந்தர் அழைத்தது	: அப்பர்
சேக்கிழார் பெருமான் இட்ட பெயர்	: வாகீசர்
ஏனைய பெயர்கள்		: உழவாரப்படையாளி, தாண்டகவேந்தர், ஆளுடை அரசு
காலம்				: கி.பி. 6 ஆம் நூற்றாண்டு
பின்பற்றிய நெறி			: அடிமை நெறி (தாசமார்க்கம்)
உலகில் நிலவிய காலம்		: 81 ஆண்டுகள்
ஆக்கிய திருமுறைகள்		: நான்கு, ஐந்து, ஆறு
அருளிய நூல்			: தேவாரம்
பாடிய பதிகங்கள்			: 4900
பாடல்களின் எண்ணிக்கை		: 49000
கிடைத்த பதிகங்கள்		: 312
கிடைத்த பாடல்கள்		: 3066
நான்காம் திருமுறை (விருத்தம்)	: 113 பதிகங்கள் (1070 பாடல்கள்)
ஐந்தாம் திருமுறை (குறுந்தொகை)	: 100 பதிகங்கள் (1015 பாடல்கள்)
ஆறாம் திருமுறை (தாண்டகம்)	: 099 பதிகங்கள் (0981 பாடல்கள்)
முதல் பாடல்			: கூற்றாயினவாறு எனத்தொடங்கும் பாடல்
இறுதிப் பாடல்			: ஒருவனையும் அல்லாது எனத்தொடங்கும்பாடல்
முக்தி அடைந்த தலம்		: திருப்புகலூர் (நாகை மாவட்டம், நன்னிலம் 
                                    – நாகை சாலையில் உள்ள தலம்
சமகால நாயன்மார்கள்		: திருஞானசம்பந்தர், அப்பூதியடிகள்,
				   திருநீலகண்டயாழ்ப்பாணர், குலச்சிறையார், மங்கையர்க்கரசியார், முருக நாயனார், 
                                    திருநீலநக்கர்
இறைவன் திருவடியில் 
இணைந்த நட்சத்திரம்		: சித்திரை மாதம் சதய நட்சத்திரம்

திருநாவுக்கரசர் வாழ்வில் நிகழ்ந்த திருவருள் நிகழ்ச்சிகள்


பண்ருட்டிக்கு அருகே திருவதிகையில் தமக்கையார் திருநீறிட,
"கூற்றாயினவாறு" எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடி இறையருளால் சூலை நோய் நீங்கபெற்றார் – 4 ஆம் திருமுறை, முதல் பதிகம், முதல் பாடல்

நீற்றறையில் சிதைவேதுமுறாது ஐந்தெழுத்து ஓதி அமர்ந்திருந்தார்
"ஐயர் திருவடி நீழல் அருளாகிக் குளிர்ந்ததே" – பெ.பு. 1368

சமணர்களால் இவருக்கு ஊட்டப்பட்ட நஞ்சு அமுதமானது
"நஞ்சு அமுது ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே" – நான்காம் திருமுறை, 70 ஆவது பதிகம், 5 ஆவது பாடல்

சமணர்கள் ஏவிய யானை இவரைக் கொல்லாமல் வணங்கிச் சென்றது
"கொலை செய் யானைதான் கொன்றிடுகிற்குமே" – 5-91-5

சமணர்கள் இவரைக் கல்லோடு கட்டி கடலில் எறிந்தபோது கல் தெப்பமாக மாறி கரை அடைந்தார்
"கல்லினோடு என்னைப் பூட்டி அமண் கையர்" – 5-72-7

திருக்கயிலைப் பொய்கையில் மூழ்கி திருவையாறு குளத்தில் எழுந்தருளினார்.
மாதர்பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி– 4-3-1

திருவாய்மூரில் இறைவனது ஆடல் காட்சியினைக் கண்டார்
எங்கே என்னை இருந்திடம் தேடிக்கொண்டு – 5-50-1

திருபைஞ்ஞீலியில் இறைவனால் பொதி சோறு அளிக்கப்பெற்றார்
விரும்பும் பொதிசோறும் கொண்டு நாவின் தனிமன்னர்க்கெதிரே– பெ. பு. 1575

திருப்புகலூரில் உழவாரப் பணி செய்த இடங்களிலெல்லாம் இறைவன் பொன்னும் நவமணியும் விளங்கித் தோன்றச் செய்தான்
உழவாரம் நுழைந்த இடம்தான் எங்கும் பொன்னினொடு நவமணிகள் பொதிந்திலங்க அருள் செய்தார் – பெ. பு. 1686



திருநாவுக்கரசர் தம் வாழ்வில் நிகழ்த்தியருளிய திருவருள் நிகழ்ச்சிகள்


பெண்ணாகடத்தில் (பெண்ணாடம், விருத்தாசலம் அருகில்) தம் தோள் மீது சூலக்குறியும், இடபக்குறியும் இடுமாறு இறைவனை வேண்ட, அவ்வாறே இறைவனும் தம் பூத கணங்களை அனுப்பி அக்குறிகளை அவர் தோள் மீது இடுமாறு செய்தான்.
"பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம்" – 4-109-1

நல்லூரில் தம் முடி மீது இறைவன் திருவடி சூட்டப்பெற்றார்.
கோவாய் முடுகி அடுதிறற் கூற்றம் குமைப்பதன் முன் பூவார் அடிச்சுவடு என் மேற் பொறித்துவை – 4-96-1

திங்களூரில் (திருவையாற்றிற்கு அருகில்) அரவம் தீண்டி இறந்த அப்பூதியடிகள் மகனைத் திருப்பதிகம் பாடி உயிர்ப்பித்தார்
ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர்வரை – 4-18-1

திருவீழிமிழலையில் இறைவனிடம் வேண்டி படிக்காசு பெற்று மக்கள் பசி தீர்த்தார்
அல்லார் கண்டத்து அண்டர்பிரான் அருளால் பெற்ற படிக்காசு – பெ. பு. 1529

திருமறைக்காட்டில் அடைக்கப்பட்டிருந்த திருக்கதவினைத் திருப்பதிகம் பாடித் திறக்கச் செய்தார்.
பண்ணினேர் மொழியாள் உமை பங்கரோ – 5-10-1

நால்வர் பெருமக்களைத் தரிசிக்க